மீண்டும் ஹீரோ எண்ட்ரி! பறக்கும் சான்ஸ்!
ஜெயம்ரவி நடிச்ச கோமாலி படம் மூலமா இயக்குனரா அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அவரோட முதல் படத்துலயே ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொண்டாடின இவரு அடுத்த படத்துலயே ஹீரோவாவும் அறிமுகமானாரு. அந்த வகையில அவரு இயக்கி நடிச்ச லவ் டுடே படமும் வெற்றிய பதிவு செஞ்சதோட அடுத்தடுத்த வாய்ப்புகளும் வந்துட்டு இருந்துச்சு.
அந்த வரிசையில விக்னேஷ் சிவன் இயக்கத்துல பிரதீப் நடிக்குற எல்.ஐ.சி திரைப்படத்துல கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே சூர்யா, சீமான் ஆகியோர் நடிச்சிட்டு வராங்க. அனிருத் இசையமைக்கிற இந்த படத்தோட படப்பிடிப்பு இறுதி கட்டத்த எட்டி இருக்கு. இத தொடர்ந்து, ஹீரோவா நடிக்க இருக்க மற்றொரு படம் குறித்த அறிவிப்பும் அண்மையில வெளியானுச்சு. அந்த வகையில, அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிற இந்த படத்துக்கு ட்ராகன் அப்டிங்குற டைட்டில அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. இந்த படத்துல பிரதீப்போட சேந்து, மிஷ்கின், யூடியூப் பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடிக்க இருக்காங்க. இந்த ட்ராகன் படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைச்சிருக்காரு.