முதல்முறையாக மத்திய அரசுக்கு வழங்கும் அதிக தொகை!
இதுவரை இல்லாத வகையில் ஒன்றிய அரசுக்கு ரூ .2.10 லட்சம் கோடி நிதி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ. 87,000 கோடி மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.