தொடக்கப் பள்ளியில் 6 மாணவர்களுக்கு உடல் நிலை மோசம்!

Aug 7, 2024 - 22:57
Sep 9, 2024 - 20:33
 7
தொடக்கப் பள்ளியில் 6 மாணவர்களுக்கு உடல் நிலை மோசம்!

தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் அருணா தகவல்..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ள  பி. மேட்டுப்பட்டி தொடக்கப்பள்ளியில் கல்வி கற்கும் 6 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை அறிகுறியுடன் இலுப்பூர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் ராம் கணேஷ்  உடனடியாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அங்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட சுகாதார அலுவலரிடம்  மாணவர்களுக்கான  பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள  பிள்ளையார் கோயில்  ஊரணி தண்ணீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும், இது பெரியவர்களுக்கு பாதிப்பு இருக்காது, ஆனால் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  என கூறினார்.

பின்னர்,, அங்கு தயார் செய்யப்பட்ட உணவு  சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர், சுகாதாரமற்ற உணவு தயாரிப்பதாகவும், அங்கு பணியில் ஈடுபட்டவர்களையும் எச்சரிக்கை செய்தார்.

ஏன் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு மேற்கொண்டு, முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என அதிகாரிகளிடம் விசாரணை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, ஆறு மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், மஞ்சள் காமாலைக்கு அறிகுறி காய்ச்சல் தான் என கூறினார்.

மேலும் பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் ஊரணி தண்ணீர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாதாக கூறினார்.