விவசாயிகளுக்கு ID கார்டு!

Sep 11, 2024 - 01:10
 38
விவசாயிகளுக்கு ID கார்டு!

விவசாயிகளுக்கு ID கார்டு!

நாடு முழுவதும் ஆதார் அட்டை போன்று, விவசாயிகளுக்கு அடையாள அட்டை அதாவது "விவசாயி ஐடி" வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் அட்டை போன்ற விவசாயிகளுக்கு என்று தனி அடையாள அட்டைகளை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது. மேலும், முதல் முயற்சியாக 5 கோடி விவசாயிகளுக்கு வரும் மார்ச் மாதத்திற்குள் அடையாள அட்டை வழங்கப்பட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளுக்காக மத்திய அரசு செய்த நலத்திட்டங்கள்!

மத்திய அரசு விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உங்களுக்கு ஆண்டுதோறும் 6000 வழங்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் மூன்று தவணைகளில் நேரடி பரிமாற்றம் மூலம் அவர்களது வங்கி கணக்குகளுக்கே பணம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடன் திட்டங்கள், விவசாய பொருட்கள், பயிர் காப்பீடு திட்டம், மருந்துகள் போன்ற பொருட்கள் வாங்க மானியங்கள் உட்பட பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது.

வேளாண்மை திட்டங்களில் டிஜிட்டல் முறை!

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், வேளாண்மை திட்டங்களில் டிஜிட்டல் முறையை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே வேளாண் துறையை டிஜிட்டல் மையமாகும் திட்டத்தின் ஒரு பகுதியாக தான், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை பதிவு செய்து, பின் அவர்களுக்கென தனி அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், விவசாயிகள் பல்வேறு வேளாண் திட்டங்களை எளிதில் பெற முடியும்.