ரஜினிகாந்தின் "கூலி" ! லோகேஷ் கனகராஜ் மீது எழுந்த விமர்சனங்கள்!

ரஜினிகாந்தின் "கூலி" படத்திற்கு எழுந்த சர்ச்சை !

May 5, 2024 - 00:51
May 5, 2024 - 00:52
 15
ரஜினிகாந்தின் "கூலி" ! லோகேஷ் கனகராஜ் மீது எழுந்த விமர்சனங்கள்!

ரஜினிகாந்தின் "கூலி" !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்திற்கு "கூலி" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் மீது எழுந்த விமர்சனங்கள்!

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் அனைத்துமே பழைய படங்களின் கதை தான் என்றும், டைட்டில் கூட பழைய படத்தின் டைட்டிலை தான் வைக்கிறார் என்றும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் இயக்கிய "மாநகரம்"- மாநகர காவல் படத்தில் இருந்து வந்தது என்றும் , அடுத்ததாக "கைதி " - ஒரு கைதியின் டைரி, "மாஸ்டர் " - வாத்தியார், அடுத்ததாக "விக்ரம்" - கமல்ஹாசன் நடித்த விக்ரம்  படம் , "லியோ" - பழைய ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் என அவரை சொல்லி இருந்தார். இப்பொழுது ரஜினிகாந்தை வைத்து எடுக்கும் படத்திற்கு ,சரத்குமார் நடித்திருந்த கூலி படத்தின் டைட்டில் வைத்திருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.

கூலி படத்தின் கதையில் ரஜினி பல வருடத்திற்கு முன்பே நடித்து விட்டாரா?

டைட்டில் மட்டுமின்றி ரஜினிகாந்த் நடித்த "தீ" என்ற பழைய படத்தின் கதை தான் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் கூலி படத்தின் கதை என்றும் கூறுகின்றனர். ஏனென்றால், "தீ" படத்தில் வரும் காட்சிகளைப் போலவே, இந்த கூலி படத்திலும் வைத்திருக்கிறார் என்றும் , ரஜினி நடித்த தீ படத்தின் அடுத்த பாகம்தான் இந்த கூலியா ? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்தின் "தீ" படத்தைப் போலவே "கூலி " !

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த "தீ" படத்தின் ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூலியாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அதன் பின்னர், தங்க கடத்தல் பிசினஸில் ஈடுபட்டு கேங்ஸ்டராக மாறுவார். பின் அவரது தம்பி போலீஸ் அதிகாரியாக மாறும் நிலையில், அண்ணனை பிடிக்க முயற்சி செய்வார். தீ படத்தில் ஹார்பரில் தங்கம் கடத்தும் போது சூப்பர் ஸ்டார் சண்டை போடும் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தான் கூலி படத்தின் இன்ட்ரோ டீசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். கூலி பேட்ஜ் அந்த படத்தில் ரஜினிகாந்தின் உயிரை ஒருமுறை காப்பாற்றும், அதே போல பேட்ஜ் அணிந்துக் கொண்டு அதில், ரத்தம் படிந்திருக்க அதை துடைத்துக் கொண்டு வருவது போல கூலி படத்தின் காட்சிகளை லோகேஷ் கனகராஜ் எடுத்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.  எனவே, தீ  படத்தையும், லோகேஷ் கனகராஜன் கூலி படத்தையும் சேர்த்து வைத்து ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும் லோகேஷ் கனகராஜின் LCU - வில் இந்த கூலி திரைப்படம் வருமா என்பது பற்றியும் சில விமர்சனங்கள் பரவி வருகிறது