ஜெயம் ரவிக்கு பெண் பாடகியுடன் தொடர்பு! விவாகரத்துக்கு காரணம் இதுதான் | Jayam ravi
ஜெயம் ரவிக்கு பெண் பாடகியுடன் தொடர்பு! விவாகரத்துக்கு காரணம் இதுதான் | Jayam ravi
நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர் இதை வெளியிட்ட பின் ரசிகர்கள் அனைவரும் ஆர்தியைப் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தவறான தகவல்களை பரப்பி வந்தனர். மேலும் சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்தாலே அதற்கு தனுஷ் தான் காரணம் என்றும் சில பேர் கூறிவந்தனர். இந்த நிலையில், ஆர்த்தி இந்த விவாகரத்து பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த விவாகரத்து முடிவு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு தான். இதைப் பற்றி என்னிடம் ஆலோசிக்கவில்லை என்றும் நான் அவரை சந்திக்க போனாலும் அவர் என்னை சந்திக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் இந்த முடிவால் நானும் என் பிள்ளைகளும் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் ஆர்த்தி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆர்த்திக்கு ஆதரவாக பேசி வந்தனர்.
ஜெயம் ரவி - கெனிஷா தொடர்பாக சிக்கிய ஆதாரங்கள்!
இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி, ஆர்த்தியை விவாகரத்து செய்ய காரணம் ஒரு பெண் பாடகி தான் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜெயம் ரவிக்கு சினிமாவை தாண்டி சில நெருங்கிய நண்பர்கள் இருந்துள்ளனர்.
அவர்களுடன் இவர் அடிக்கடி கோவா ட்ரிப் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கோவாவில் ஒரு பப்பில் பாடகியாக இருந்தவர் கெனிஷா பிரான்சிஸ். இவர் பல ஆல்பம் சாங்களை பாடிவந்துள்ளார். மேலும் நடிகர் ஜீவா உடைய தயாரிப்பில் "இதை யார் சொல்வாரோ" என்ற ஒரு ஆல்பம் பாடலையும் பாடியிருக்கிறார். இதனுடைய வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஜெயம் ரவி சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். பின் இவர்களுக்கிடையில் ஒரு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி கெனிஷாவை பார்ப்பதற்காக அடிக்கடி கோவாவிற்கும் சென்று வந்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஜூன் மாதம் ஜெயம் ரவி அவருடைய திருமண நாளன்று ஷூட்டிங் இருப்பதாக கூறிவிட்டு வெளியில் சென்று இருக்கிறார். ஆனால் கடந்த 14 வருடங்களாக திருமண நாளன்று ஜெயம் ரவி அனைத்து வேலைகளையும் ஒதுக்கி விட்டு அவருடைய குடும்பத்துடன் தான் நேரத்தை செலவிடுவாராம். ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஷூட்டிங் இருப்பதாக கூறி விட்டு சென்று விட்டாராம். அப்பொழுது தான் கெனிஷா, காருக்குள் இருப்பது வெளியில் தெரியாமல் இருக்க கிளாஸ்களில் ஓட்டும் ஷீட்டுகளின் அளவு அனுமதித்த அளவை விட அதிகமாக இருந்த காரணத்தினால் கோவா போலீசிடம் ஒரு முறை அபராதம் கட்டியிருக்கிறார். மேலும் அந்த பில்லில் கார் ஜெயம் ரவி பெயரில் ரெஜிஸ்டர் ஆகி இருப்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனை தெரிந்து கொண்ட ஆர்த்தி திருமண நாள் அன்று ஷூட்டிங் போவதாக சொல்லிவிட்டு கோவாவில் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்டு ஜெயம் ரவியிடம் சண்டை போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே காரை கோவாவில் அதிவேகமாக ஓட்டி சென்று ஜெயம் ரவியும் ஒரு முறை அபராதம் கட்டியிருக்கிறார். இதற்குப் பின் தான் ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் உள்ள ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஜெயம் ரவி, அவருடைய பிறந்தநாளுக்கு முன்பே ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக திடீரென்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் கெனிஷா தொடர்பான தகவல்களை ஒரு பிரபலமான பத்திரிகை நிறுவனம் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.