அமேதி – ரேபரேலியில் முந்துவது யார்? 45 கோடியே 10 லட்சம் வாக்குகள் பதிவு!

May 20, 2024 - 20:04
 4
அமேதி – ரேபரேலியில் முந்துவது யார்? 45 கோடியே 10 லட்சம் வாக்குகள் பதிவு!

மக்களவை தேர்தலில் 5ம் கட்டமாக 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 11 மணி நேர நிலவரப்படி மொத்தம் 23.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதன் படி, பீகாரில் 21. 11 சதவீதம்,

மகாராஷ்ட்டிராவில் 15.93 %

மேற்கு வங்கத்தில் 32.70 % வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது.

ஒடிசாவில் 21.07%

ஜார்கண்டில் 26.18%

வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் 21.37 %

லடாக்கில் 27.87 %

உத்திரப்பிரதேசத்தில் 27.76 % வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலில் இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

மேலும், 5 கட்ட தேர்தலில், உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஸ்மிருதி ராணி போட்டியிடும் அமேதி, ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச், பீகாரில் சரண், மற்றும் ஆறு மக்களவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்ட்டிராவில் கல்யாண் ஆகிய தொகுதிகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.