குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்!

May 7, 2024 - 00:06
 7
குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்!

ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் அலாம்கிர் ஆலன். ஜார்கண்ட் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து ஜார்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இவரது வீட்டிலிருந்து ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரையிலான ரொக்கப்பணம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கைப்பற்ற பணம் எவ்வளவு என்பதை கண்டறிய ஏராளமான பணம் என்னும் மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனால் சிறிது நேரம் கழித்து இது குறித்த முழு விவரம் வெளியாகும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.