கைதிகளின் சொத்துக்கள் முடக்கம்!

Jul 29, 2024 - 23:14
 10
கைதிகளின் சொத்துக்கள் முடக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை காவல்துறை திட்டமுட்டுள்ளது.

அதாவது பாகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான விசாரணையும் தீவிரமடைந்து வரும் நிலையில் இதில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக மீதமுள்ள அனைவருக்குமே பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் முக்கியமான இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட 20 நபர்களின் சொத்துக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து இவர்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் போலீசார் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  

இந்த கொலைக்காக பல்வேறு தரப்பிலிருந்து 4 லட்சம் 5 லட்சம் என வெவ்வேறு நபர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை போலீசார் ஆதாரங்களோடு உறுதி செய்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் அடுத்த நடவடிக்கையும் எடுக்க உள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.