தமிழில் உரையாற்ற போகும் புதுச்சேரி ஆளுநர்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் உரையாற்ற போகும் ஆளுநர் யார்? சி.பி.ராதாகிருஷ்ணனா? கைலாசநாதனா? என கேள்வி எழுந்து வந்தது.
புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதன் முன்னதாக பொறுப்பு ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதில், நிரந்தர ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில், வரும் 31ஆம் தேதி கூடும் பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்ற வருமாறு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, சபாநாயகர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் மூலம், புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழிசை சௌந்தரராஜனுக்குப் பிறகு இரண்டாவது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழில் உரையாற்றப்போவது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மற்றும் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.