2024க்கான திருநங்கை விருது!

Jul 29, 2024 - 23:31
 14
2024க்கான திருநங்கை விருது!

தமிழகத்தின் சிறந்த திருநங்கையாக கன்னியாகுமரியை சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணியாற்றுவோருக்கும், அவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வோரையும் சிறப்பிக்கும் பொருட்டு கடந்த 2021ம் ஆண்டு முதல் விருது மற்றும் ரூ. 1லட்சம் காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் தேவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி என்கிற திருநங்கை, வில்லிசை மேல் ஆர்வம் கொண்டு புராணக் கதைகளை படித்து தனித்து 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார்.

அதோடு, மாணவ மாணவிகளுக்கு கல்வி மற்றும் ஊணமுற்ற குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். மேலும், வரதட்சனை தடுப்பு, கொராணா விழிப்புணர்வு, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இத்தகையை செயல்களை செயல்களை பாராட்டி 2024ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.