மரக்கன்றுக்கு ஆசிரியர் பெயர் சூட்டிய மாணவிகள்!
மரக்கன்றுக்கு பள்ளி தலைமை ஆசிரியரின் பெயரை சூட்டியதால் நெகிழ்ச்சி!
சென்னை அருகே சின்ன பேரூரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது .இதில் மதுரவாயல் பசுமை குழுவுடன் இணைந்து பள்ளியில் பயிலும் மாணவிகள் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர் .அப்போது மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் போன்ற உறுதிமொழிகளை மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
அப்போது பாதாம் மரக்கன்று ஒன்றை பள்ளி தலைமை ஆசிரியர் தனது கையால் நட்டு வைத்தார் அந்த மரக்கன்றுக்கு அவர் பெயரான சாந்தலட்சுமி என பசுமை குழு அமைப்பு சார்பில் பெயர் சூட்டப்பட்டது, இதனால் அங்கு மாணவிகள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்பட்டது.
மேலும் அனைத்து கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட வேண்டும் என மாணவிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் டாக்டர் .MGR கல்லூாரியின் வணிகவியல் துறை போராசிரியர் டாக்டர்.C.P.செந்தில் குமார் மற்றும் க்ரீன் ட்ரீம் பவுண்டேஷன் நிறுவனர் மேத்யூவ் மற்றும் சமூக ஆர்வலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டும் மரகன்றுகளை நட்டனர்.