விஜய் சேதுபதி ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Aug 3, 2024 - 22:10
Sep 9, 2024 - 21:54
 9
விஜய் சேதுபதி ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

மகாராஜா திரைப்படத்தின் ஐம்பதாவது நாளை ஒட்டி, நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

விஜய் சேதுபதியின் 50 படமான மகாராஜா திரைப்படம்  வெளியாகி 50 நாட்களில் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த எந்த திரைப்படமும் பெரிய வெற்றியை தராத நிலையில் இவருடைய 50வது திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இது விஜய் சேதிபதி ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதி சென்னையில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

அண்ணா நகரில் உள்ள தனியார் மாலில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குனர் நிதிலனுக்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, படக் குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் விஜய் சேதுபதியும் இணைந்து, 50-ஆவது நாள் வெற்றி விழாவை கொண்டாடினார்.