முடிவுக்கு வந்த வேங்கை வயல் வழக்கு!

காவலர் முரளி ராஜா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளி என சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Jan 24, 2025 - 16:47
Jan 24, 2025 - 17:13
 5
முடிவுக்கு வந்த வேங்கை வயல் வழக்கு!

முடிவுக்கு வந்த வேங்கை வயல் வழக்கு!

நாட்டையே அதிர வைத்த வேங்கை வயல் விவகாரம் விவாதப்பொருளான நிலையில் தற்போது முடிவுக்கு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில்  கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அன்றைய தினம் வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது

இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்து வந்த நிலையில் இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது 

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக வேங்கை வயல் முத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சந்தேகம் ஏற்பட்ட 300 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் 3 மாத காலத்திற்குள் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் 6 மாதமாக இந்த வழக்கு பட்டியலிடப்படவில்லை. 

இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர் 

அந்த குற்றப்பத்திரிக்கையில் முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையாவிற்கும், குற்றம் சாட்டப்பட்ட வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த  காவலர் முரளி ராஜா சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இவர்கள் இந்த செயலை செய்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களுமே பட்டியல் இனத்து மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட  குரல் மாதிரி பரிசோதனையில் தான் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களும் செல்போன்களில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக எஸ்எம்எஸ் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.