ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத் | Vinesh Announces Retirement After Paris Olympics 2024 Disqualification

Aug 8, 2024 - 13:53
 21
ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத் | Vinesh Announces Retirement After Paris Olympics 2024 Disqualification

ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத் | Vinesh Announces Retirement After Paris Olympics 2024 Disqualification

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 - 2024  மல்யுத்தத்திற்கு குட் பை” என்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதிய வினேஷ் போகத், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். ஆனால், இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோதுவதற்காக, போட்டிக்கு முன் செய்யப்பட்ட எடை தகுதி சோதனையில், வினேஷின் உடல் எடை 50 கிலோவுக்கு 100 கிராம் அதிகமாக இருந்தது. இதனால், ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வினேஷ் போகத்தின் இந்த அறிவிப்பால் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.