Chennai Metro Update: இனி எங்க வேணாலும் Easy-யா போகலாம்

Sep 2, 2024 - 19:41
 14
Chennai Metro Update: இனி எங்க வேணாலும் Easy-யா போகலாம்

Chennai Metro Update: இனி எங்க வேணாலும் Easy-யா போகலாம்

சென்னை மெட்ரோவின் புது திட்டங்கள் நகரத்தின் தோற்றத்தை முற்றிலும் மாற்றப்போகின்றன. இனி சில ஆண்டுகளில் மெட்ரோவில் இருந்து இறங்கி, வெளியே சாலையில் கால் வைக்காமலேயே நேரடியாக மால்கள் அல்லது வேலை செய்யும் இடங்களுக்கு செல்வது சாத்தியம் ஆகும். தற்போது இயங்கி வரும் 2 வழித்தடங்களுக்கு மேலும் மூன்று வழித்தடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது, இது முடிந்தால் விரிவான மெட்ரோ நெட்வொர்க்கை கொண்ட நகரமாக சென்னை மாறும்.
 
மெட்ரோ நிலையங்களின் அருகில் உள்ள இடங்களை காமர்ஷியல்(வணிக வளாகம்) மையங்களாக மாற்றுவது முக்கிய நோக்கமாக்கப்பட்டுள்ளது. திருமங்கலம், ஆலந்தூர், வடபழனி, கே.கே.நகர், மந்தைவெளி, அண்ணாநகர் மேற்கு, ஆயிரம் விளக்கு, கோயம்பேடு ஆகிய எட்டு இடங்கள் இவ்வகை வளர்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ நிர்வாகம் சில இடங்களை நேரடியாகவும், சிலவற்றை எம்டிசியுடன் இணைந்து டெவலப் செய்ய திட்டமிட்டுள்ளது. மெட்ரோ நிலையங்களுக்கு நேரடியாக இணைக்கப்படும் பிரத்தியேக நடைபாதைகள் ஏற்படுத்தப்படும்.
 
மேலும், நிதியளிப்பு, வருமானம், மற்றும் கடன் திருப்பிச் செலுத்துவது போன்ற தேவைகளை கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களின் அருகிலான பகுதிகளை மெட்ரோ நிர்வாகம் வணிக மையங்களாக மாற்றும் திட்டங்களில் ஈடுபடுகிறது. இது மெட்ரோ பயணிகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-2022 மற்றும் 2022-2023 நிதியாண்டுகளில் மெட்ரோவின் வருமானம் 65% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.