இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டார்

Sep 3, 2024 - 12:39
 25
இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டார்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டார்

நமது நாட்டில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதை நினைவுகூரும் வகையில் 
சுப்ரீம் கோர்ட்டின் புதிய கொடி மற்றும் சின்னத்தை நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.
மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நிகழ்ச்சியில் தான் சுப்ரீம் கோர்ட்டின் கொடியை அவர் அறிமுகம் செய்து வைத்தார். 

அசோக சக்கரம், உச்ச நீதிமன்ற கட்டிடம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றுடன் நீல நிறத்தில் உச்ச நீதிமன்றத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட பல நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.