இவரை போல ஒரு முதல்வரை நான் பார்த்ததேயில்லை…எங்கள் கோரிக்கையை நாங்கள் வென்றெடுப்போம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை!

Mar 24, 2025 - 16:55
Mar 24, 2025 - 17:00
 6
இவரை போல ஒரு முதல்வரை நான் பார்த்ததேயில்லை…எங்கள் கோரிக்கையை நாங்கள் வென்றெடுப்போம்

இவரை போல ஒரு முதல்வரை நான் பார்த்ததேயில்லை…எங்கள் கோரிக்கையை நாங்கள் வென்றெடுப்போம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், “அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருக்கிறார் என்றால் அது முதல்வர் ஸ்டாலின் தான். எங்களை சந்தித்து பேச அவருக்கு மனமில்லை.

இந்த கோரிக்கைகளை கண்டிப்பாக நாங்கள் வென்றெடுப்போம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திமுக அரசு மீது கொந்தளிப்பில் இருக்கிறார்கள். எங்களை ஏமாற்ற நினைத்தால் 2026 தேர்தலில் நீங்கள் ஏமாறுவீர்கள். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்என்று தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனதில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.

அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும்.

ஆனால், அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு செய்ய முன்வரவில்லை.

அதை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309-வது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் திமுக அரசு ஏமாற்றி உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.