செல்வப்பெருந்தகையின் முறைகேடு அம்பலம்… பிணை இல்லாமல் ரூ.65 லட்சம் எப்படி - அண்ணாமலை

திமுகவும் உடந்தையா?

Mar 28, 2025 - 17:24
 3
செல்வப்பெருந்தகையின் முறைகேடு அம்பலம்… பிணை இல்லாமல் ரூ.65 லட்சம் எப்படி - அண்ணாமலை

செல்வப்பெருந்தகையின் முறைகேடு அம்பலம்…… பிணை இல்லாமல் ரூ.65 லட்சம் எப்படி - அண்ணாமலை

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருக்கிறார்.

கழிவு நீரகற்றும் பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள ரூ.524 கோடி மதிப்பில் 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரத்தில் 54 பயனாளிகள்; சென்னை கூட்டுறவு வங்கியில் 33 பயனாளிகளுக்கும், நவீன கழிவு நீரகற்றும் வாகனம் வாங்கக் கடன் பெறப்பட்டிருக்கிறது.  

காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் ஆகஸ்ட் 12 முதல் 19ம் தேதிகளுக்கிடையே ஒரே வாரத்தில் ரூ.65 லட்சம் வீதம், 54 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

செல்வப்பெருந்தகையின் ஊழல் குற்றச்சாட்டிற்கு திமுகவும் உடந்தையா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள ரூ.524 கோடி மதிப்பில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்திருந்தது.

புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, செக் புத்தகம் வழங்கிய அதே தினத்தில், கணக்கில் 65 லட்ச ரூபாய் வரவு வைத்து, பின்னர் இரண்டு செக்குகளில் கையொப்பம் வாங்கிவிட்டு பயனாளிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடன் வழங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன இதுவரை கடன் தொகையில் ஒரு ரூபாய் கூடத் திருப்பிச் செலுத்தப்படவில்லை.

கடன் பெற்ற தினத்திற்கு பிறகு, அந்தக் கணக்கில் எந்தவித பணப் பரிமாற்றங்களும் இதுவரை நடைபெறவில்லை.  

கூட்டுறவு வங்கிகள், எந்தவிதப் பிணையும் இல்லாமல் இத்தனை பேருக்குத் தலா ரூ. 65 லட்சம் எந்த அடிப்படையில் வழங்கியது. உண்மையில் கடன் பெற்றவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தானா என்ற சந்தேகம் எழுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.