உக்ரைனுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் உதவி: பிளிங்கன் அறிவிப்பு | Antony Blinken | Ukraine

Sep 12, 2024 - 18:49
 33
உக்ரைனுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் உதவி: பிளிங்கன் அறிவிப்பு | Antony Blinken | Ukraine

உக்ரைனுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் உதவி: பிளிங்கன் அறிவிப்பு | Antony Blinken | Ukraine

உலகையே அதிரவைத்து கொண்டிருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிக்க அமெரிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இப்படி முயற்சிகள் நடக்கின்ற போதிலும், உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து பண உதவி கொடுத்து வருகிறது.

ரஷ்ய அதிபர் புதின், இந்தியா, சீனா, பிரேசில் மாதிரியான நாடுகள் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தினால், இந்தப் போரை முடிக்கலாம் எனக் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சமீபத்தில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்று, அங்கு மின்சாரம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு 700 மில்லியன் டாலர் உதவி அளிப்பதாக அறிவித்தார்.