தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் பாமகவில் சலசலப்பு…. வழக்கறிஞர் பாலு சொன்ன முக்கிய தகவல்!
கொடி மற்றும் சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் பாமகவில் சலசலப்பு…. வழக்கறிஞர் பாலு சொன்ன முக்கிய தகவல்!
பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து, பாமக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலு சென்னை தியாகராய நகர் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்து பேசி வருகிறார்.
பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு A-Form, B- Form கையொப்பமிடும் அதிகாரம் அன்புமணிக்கு தான் உள்ளது.
மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, பாமக நிறுவனர் ராமதாஸின் லட்சியங்களை நிறைவேற்ற அன்புமணி பாடுபடுவார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் மூலமாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்வார்கள்.
டாக்டர் ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அன்புமணி ராமதாசை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் கட்சியினுடைய கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும் மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என பாலு தெரிவித்துள்ளார்.