டாக்டர் முத்துலெட்சுமியின் 139வது பிறந்தநாள் விழா!

Jul 30, 2024 - 21:56
 13
டாக்டர் முத்துலெட்சுமியின் 139வது பிறந்தநாள் விழா!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் பெண்களின் சமூக சீர்திருத்த வாதியும் தேவதாசி முறையை ஒழித்தவரும் மட்டுமல்லாமல் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை தொடங்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 139 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

கடந்த வருடம் தமிழக முதல்வர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு உத்தரவிட்டதோடு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆறடி உயரம் உள்ள முத்துலட்சுமி ரெட்டி திருஉருவ சிலையை நிறுவி திறந்து வைத்தார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் எம்எல்ஏ முத்துராஜா மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் மருத்துவர் கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இதன் பின்னர் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இதன் பின்னர் மருத்துவ மாணவர்கள் தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று அவருடைய பிறந்த வீடான மச்சுவாடியில் உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ள முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு திமுக மருத்துவரணி பொறுப்பாளர் முத்துக் கருப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதேபோன்று திலகவதியார் ஆதின பொறுப்பாளர் தயானந்த சந்திரசேகரன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.