முதல் கூட்ட துவக்க விழா தொடக்கம்!

Oct 8, 2024 - 21:26
 10
முதல் கூட்ட துவக்க விழா தொடக்கம்!

புதுக்கோட்டை மாநகராட்சி முதல் கூட்ட துவக்க விழா நாளை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே என் நேரு ரகுபதி மற்றும் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மாநகராட்சி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற உள்ளது.

இதன் முன்னதாக விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் மாநகர மேயர் திலகவதி செந்தில் வரவேற்கிறார். மாநகராட்சி ஆணையர் நாராயணன் நன்றியுரையாற்றுகிறார்

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு முதல் மாநகராட்சி கூட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.  

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாவட்ட செயலாளர் அரசு வழக்கறிஞருமான செல்லபாண்டியன் மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி மாநகரச் செயலாளர் செந்தில் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இக்கூட்டத்தில் அனைத்து மாநகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மாநகர திமுக பொறுப்பாளர்கள் நகராட்சி பொறியாளர் இப்ராகிம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.