அரங்கேறிய அதே மெரினா சம்பவம்!

Oct 9, 2024 - 18:57
 10
அரங்கேறிய அதே மெரினா சம்பவம்!

இந்திய விமானப்படையின் 93ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் விமானப்படை வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பை தொடர்ந்து சுகாய் 30, தேஜஸ், ரஃபேல், உள்ளிட்ட 20 வகையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் வான் சாகசமும் நடைபெற்றது.

சூரட கிரண், சாரங் உள்ளிட்ட விமான சாகச குழுக்கள் வான் சாகசம் செய்து காண்போரை வியக்க செய்தன.

இதில் விமானப்படையில் பணியாற்றுவோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், என்சிசி மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சாகச நிகழ்ச்சிகளை அங்கு திரண்டிருந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.

அத்துடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தன.

இதனிடையே, அணிவகுப்பின் போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் 5க்கும் மெற்பட்டோர் மயக்கமடைந்தனர். மயங்கிய வீரர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஏற்கனவே மெரினா சாகச நிகழ்வு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் விமானப்படை வீரர்கள் மயங்கி விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.