தமிழகத்தை விட்டு வெளியேறும் சாம்சங்?
தொழிலாளர்கள் பிரச்சனை காரணமாக சாம்சங் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
2000 ஊழியர்களைக் கொண்ட சாம்சங் நிறுவனத்தை நொய்டாவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசும் தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ஒரு மாதமாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதும், சிஐ,டி,யு தொழிற்சங்கத்திற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே தங்கள் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கென நலச்சங்கம் இருப்பதால் சிஐடியு வை பதிவு செய்ய முடியாது என சாம்சங் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த சிஐடியு பதிவு விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம் என சாம்சங் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
உத்திரப்பிரதேசமும், ஆந்திராவும் இந்நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு அழைக்க முயற்சிக்கும் நிலையில், குஜராத்தும் இதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.