2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர்!
ஆர்.என்.ரவி ஒப்புதல்

2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர்!
தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
8 தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவுக்கும், தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்திருந்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டியில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாநாட்டினை தொடங்கி வைப்பார்.
ஜக்தீப் தன்கர், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத்தலைவர், முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார்.