பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு மட்டும் எப்பொழுதுமே அனுமதி கிடையாது – தமிழிசை விமர்சனம்

முதலமைச்சர் வரம்பு மீறி ஆளுநரை பற்றி ஒரு ட்வீட் போடுகிறார்

Jan 7, 2025 - 17:00
Jan 7, 2025 - 17:31
 6
பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு மட்டும் எப்பொழுதுமே அனுமதி கிடையாது – தமிழிசை விமர்சனம்

பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு மட்டும் எப்பொழுதுமே அனுமதி கிடையாது – தமிழிசை விமர்சனம்  

முதலமைச்சர் வரம்பு மீறி ஆளுநரை பற்றி ஒரு ட்வீட் போடுகிறார்

தமிழக அரசு மிகத் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய தமிழிசை…. பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. ஆனால் திமுக சார்ந்த கட்சிகளுக்கும் திமுகவுக்கும் போராட அனுமதி உண்டு. மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் இல்லை என எப்பொழுதோ கூறிவிட்டது. ஆனால் இன்று தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதற்கு ஆளுநர் ஒரு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள்.   

பாஜக ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். திமுக ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள்.

தேசிய ஒற்றுமைக்கான தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று சொன்னால் அதை பிரிவினை வாதம் என்று புதிய அர்த்தத்தை தமிழக அரசால் தான் கற்பிக்க முடியும்.

தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிற பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்து கொண்டு இருப்பதை மறைப்பதற்காக இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்.

இந்த நிலைப்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு தமிழக அரசு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை தற்போது நசுக்கப்படுகிறது, தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து எந்த வகையில் எதிர்க்கட்சிகள் உதாசீனப்படுத்தப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் ,

பொங்கல் தொகுப்பில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, தமிழ்நாட்டில் யார் அந்த சார் என்று கேட்கும் போது, தமிழக அரசு யார் அந்த பாட்டி என்றும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் யார் அந்த சார்? என்று கேட்கிறார்கள் அதற்கு தமிழக அரசிடம் பதிலில்லை. முதலமைச்சர் வரம்பு மீறி ஆளுநரை பற்றி ஒரு ட்வீட் போடுகிறார். ஆனால் அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஏன் இதுவரையும் வாய் திறக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சொல்கிறார் அதுதான் ஏற்கனவே விசாரணை நடக்கிறதே, பின்னர் ஏன் நீங்கள் போராட வேண்டும் என்று கேட்கிறார். ஏன் இன்று ஆளுநருக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள்? பொங்கல் சூரியன் உதிக்கும் போது பணம் கொடுத்தால் தேர்தல் சூரியன் உதிக்கும் போது மக்கள் அதை மறந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

எல்லாவற்றையுமே தேர்தல் கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டு இருக்கும் திமுகவிற்கு 2026 மிகப்பெரிய அடியை கொடுக்கும். ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் தமிழ்த்தாய் வாழ்த்தே வந்தது. நீங்கள் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட மறந்தீர்கள்? முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை. தமிழக அரசு மிகத் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.

கருப்பு துப்பட்டா போட்டால் உங்களுக்கு என்ன? ஆடை எங்களது உரிமை, ஒரு பெண் சுதந்திரமாக கருப்பு துப்பட்டா போட்டு வர முடியவில்லை என்றால் என்ன ஆட்சி நடக்கிறது இங்கே, ஆளுநரை பார்த்தால் பயம், மக்களைப் பார்த்தால் பயம், எதிர்க்கட்சிகளை பார்த்தால் பயம், பெண்கள் அணியும் கருப்பு துப்பட்டாவை பார்த்தால் பயம் என்றால் தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது? ஆனால் கருப்பை பார்த்து ஏன் இப்பொழுது பயப்படுகிறீர்கள்?

ஒரு பெண் துப்பட்டா போடுவதற்கு தமிழகத்தில் உரிமை இருக்கிறதா? இல்லையா? எதிர்க்கட்சிகளுக்கு தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை இருக்கிறதா? இல்லையா? ஆளுநருக்கு தமிழகத்தில் தன்னுடைய கருத்தை சட்டமன்றத்தில் கூறுவதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா?.

நான் பாண்டிச்சேரியில் ஆளுநராக இருந்த பொழுது கூட தேசிய கீதம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பின்பு தான் உரையை ஆரம்பிப்போம். தேசிய கீதத்தை வைத்து இவ்வளவு பெரிய அரசியல் செய்கிறீர்கள், உங்களுடன் கூட்டணியில் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக பேசுகிறார்கள். திமுக கூட்டணி இன்று வெளுவெளுத்து போய் இருக்கிறது” என பாஜக முத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.