போப் பிரான்சிஸ் காலமானார்!
போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்

போப் பிரான்சிஸ் காலமானார்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார்.
தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமை இவரையே சேரும்.
உடல்நலக்குறைபாடு காரணமாக நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், அண்மையில் தான் வீடு திரும்பினார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
போப் பிரான்சிஸின் மறைவால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2013ல் இருந்து 12 ஆண்டுகள் போப் பொறுப்பில் இருந்து வந்தார் பிரான்சிஸ்.
போர்களை முடிவுக்கு கொண்டுவந்து உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியவர் போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.