27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி!
பாஜக 40 தொகுதிகளில் வெற்றி
![27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி!](https://channel5tamil.com/uploads/images/202502/img_67a74c62074354-97354070-80174798.gif)
27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் நிலையில் அதை விட கூடுதலான இடங்களில் 8 தொகுதிகளில் தொடர்ந்து பாஜக முன்னிலையில் உள்ளது.
மீதமுள்ள 22 இடங்களில் ஆம் ஆத்மி 18ல் வெற்றி பெற்று 4 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
இன்னும் 12 தொகுதிகளுக்கான முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட இருக்கிறது.
சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாக இருக்கிறது
கடைசியாக டெல்லியில் பாஜக 1993 முதல் 98 வரை ஆட்சியில் இருந்தது. அதன் பிறகு காங்கிரஸிடமும், ஆம் ஆத்மியிடமும் பறி கொடுத்த ஆட்சியை பாஜகவால் மீட்டெடுக்க முடியவில்லை.
சுமார் 27 ஆண்டுகளூக்கு பிறகு அந்த முயற்சியில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.