கஞ்சா விற்பனையில் சட்டக்கல்லூரி மாணவர் கைது!

May 25, 2024 - 01:39
 6
கஞ்சா விற்பனையில் சட்டக்கல்லூரி மாணவர் கைது!
கஞ்சா விற்பனையில் சட்டக்கல்லூரி மாணவர் கைது!

சென்னை மதுரவாயலில் கஞ்சா விற்பனை செய்த சட்டக்கல்லூரி மாணவரை  போலீசார் கைது செய்தனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகிக்கும் வகையில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன் பின்னர், அவரிடம் சோதனை மேற்கொண்ட போது,  அவர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் கஞ்சா  பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.  

கஞ்சா விற்பனை செய்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டபோது வீரபுரம் நியூ கண்ணியம்மன் நகர் பகுதியை சேர்ந்த 20 வயதான வெங்கட் தேவா என்பதும் இவர் எம் ஜி ஆர் பல்கலைக் கழகத்தில் 2 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி    மாணவர் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.