திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம் – நீதிமன்றம்
சில மனிதர்கள் தான் சரியாக இல்லை

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம் – நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.
கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகளை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினரும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை யாரும் அனுமதிக்க மாட்டோம் என ஒருமனதாக முடிவு செய்திருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல்துறையினர் தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்பதால் அங்கு எதை செய்தாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என தொல்லியல் துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.