ஏர்போர்ட் மூர்த்திக்கு ஜாமீன் மறுப்பு!
ஜாமீன் வழங்க முடியாது - நீதிபதி

ஏர்போர்ட் மூர்த்திக்கு ஜாமீன் மறுப்பு!
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதிகள் தரப்பு பதில் அளித்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் ஏர்போர்ட் மூர்த்தி பதிவு செய்து வந்தார்.
சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தியை விசிகவினர் தாக்கினர்.
ஏர்போர்ட் மூர்த்தியும் விசிகவினரை பதில் தாக்குதல் நடத்தினார்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.
விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில் ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார்.