எனக்கு எதிரிங்க வெளியில இல்லடா…. அவ்வளவு தான் லிமிட்…மீறினால்?
வழக்கு தொடர்வேன் - ஜோஸ் சார்லஸ்

எனக்கு எதிரிங்க வெளியில இல்லடா…. அவ்வளவு தான் லிமிட்…மீறினால்?
ஆதவ் அர்ஜூனாவுக்கு குடும்ப உறுப்பினர்களால் வலுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து தவெகவில் இணைந்த பிறகு திமுக மீது அதிகளவு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் பேச்சுக்கு அவரது குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி, ஆதவின் அரசியல் நிலைப்பாடு அவரின் தனிப்பட்ட விருப்பம் அதற்கும் எங்கள் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை என பதிவை வெளியிட்டுள்ளார்.
சமீக காலமாக ஆதவ் அர்ஜூனா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்தை தொடர்ந்து இருவருக்குமான வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது.
அண்ணாமலை மீது ஆதவ் அர்ஜூனா வைக்கும் விமர்சனங்களுக்கு நான் எதிர்ப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனரும், மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
அதோடு, தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளை தீர்த்துக்கொள்வதற்காக அவர் பிரசாந்த் கிஷோருடன் கூட்டு சேர்ந்து பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்.
ஆதவ் அர்ஜூனா இதே நிலையை தொடரும் பட்சத்தில், எங்கள் நன் மதிப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்வேன் எனவும் ஜோஸ் சார்லஸ் தெரிவித்துள்ளார்.