நாடாளுமன்றத்தில் பரபரப்பு… பதவியில் இருந்து சிறைக்கு போனால் பதவி நீக்கம் உறுதி!

எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்

Aug 20, 2025 - 18:25
 2
நாடாளுமன்றத்தில் பரபரப்பு… பதவியில் இருந்து சிறைக்கு போனால் பதவி நீக்கம் உறுதி!

நாடாளுமன்றத்தில் பரபரப்பு… பதவியில் இருந்து சிறைக்கு போனால் பதவி நீக்கம் உறுதி!

பிரதமர், மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் பதவியில் இருந்து நீக்கும் சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மக்களவையில் இந்த மசோதாவின் நகலை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கிழித்து அமித்ஷா முன்பாக வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று 3 மசோதாக்களைத் தாக்கல் செய்தார். அரசியல் அமைப்பு திருத்தம் (130 வது பிரிவு), ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா ஆகியவற்றை அமித்ஷா தாக்கல் செய்தார்.

இதில் அரசியல் அமைப்பு திருத்தம் (130வது பிரிவு) மசோதா என்பது பிரதமர்- முதல்வர் மற்றும் அமைச்சர்கள் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டால் 31-வது நாளில் அவர்களது பதவிகளை பறிக்க வகை செய்யக் கூடியது.

இதனால் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின்இந்தியா கூட்டணிஎம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

அப்போது இந்த சர்ச்சைக்குரிய மசோதாவின் நகல்களை கிழித்து அமித்ஷா முன்பாக வீசினர். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவு ஆய்வுக்கு அனுப்புவதாக அமித்ஷா அறிவித்தார்.

இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.