பாஜக வர்த்தக பிரிவுத் தலைவர் படுகொலை!

சிவகங்கையில் பரபரப்பு

Aug 29, 2025 - 16:37
 2
பாஜக வர்த்தக பிரிவுத் தலைவர் படுகொலை!

பாஜக வர்த்தக பிரிவுத் தலைவர் படுகொலை!

சிவகங்கையில் பாஜக நகர வர்த்தகப் பிரிவுத் தலைவர் சதீஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நகர வர்த்தகப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சதீஷ், சிவகங்கை நகரில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இரு சக்கர வாகனம் பழுதி நீக்கும் கடை நடத்தி வந்த சதீஷ் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஐந்து பேரை தேடி வருகின்றனர்.