விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி; ஈபிஎஸ்-ம், விஜய்யும் ஒரே இடத்தில் சந்திப்பு!
இன்றே, அனைத்து ஏற்பாடுகளும் தயார்

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி; ஈபிஎஸ்-ம், விஜய்யும் ஒரே இடத்தில் சந்திப்பு!
திட்டமிட்டப்படி நாளை கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் தவெக தலைவர் விஜய்.
விஜய், நாளை கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
லைட் ஹவுஸ் கார்னர் அல்லது, உழவர் சந்தை பகுதியில் பிரசாரத்திற்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் மாற்று இடமாக வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே விஜய் பிரச்சாரம் செய்து கொள்ளலாம் என தவெக நிர்வாகிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதே இடத்தில் நேற்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் நடத்தியிருந்த நிலையில் நாளை விஜய்யும் அதே இடத்தில் பிரச்சாரம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் பிரச்சாரத்திற்கு அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூடுவதற்கும், பார்க்கிங் போன்ற வசதிகளுக்கு ஏற்றார் போல் இந்த இடங்களை பரிந்துரை செய்துள்ளது காவல்துறை.
மேலும், நாளை காலை 11 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இன்றே, நாமக்கல் பகுதி முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டு, பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கான தண்ணீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.