இஸ்ரேலுக்கு கிடைத்த சிறந்த நண்பர் ட்ரம்ப் – ஐ.நா வில் நெதன்யாகு பெருமிதம்!

ட்ரம்ப்க்கு நன்றி

Oct 13, 2025 - 17:39
 8
இஸ்ரேலுக்கு கிடைத்த சிறந்த நண்பர் ட்ரம்ப் – ஐ.நா வில் நெதன்யாகு பெருமிதம்!

இஸ்ரேலுக்கு கிடைத்த சிறந்த நண்பர் ட்ரம்ப் – ஐ.நா வில் நெதன்யாகு பெருமிதம்!

ஐ.நா. வில் இஸ்ரேலுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக குரல் கொடுத்த ட்ரம்ம்பிற்கு நன்றி தெரிவித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

வெள்ளை மாளிகையில் இருந்து எப்போதும் இஸ்ரேலுக்காக குரல் கொடுத்த ஒரே நபர் ட்ரம்ப்.

இஸ்ரேல் வரலாற்றில் இன்றைய தினம் மறக்க முடியாத ஒன்று.

போரில் ஏராளமான வீரர்கள் தங்கள் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர். பிணைக்கைதிகளாக இருந்த எங்கள் மக்கள் இன்று பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.

ஹமாஸ் முதன் முதலாக தாக்குதல் நடத்திய நாளை நாங்கள் மறக்க மாட்டோம். இழந்த உயிர்களையும், பிரிந்த குடும்பங்களையும் நான் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.  

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த போது அதை அங்கீகரித்த ட்ரம்ப்க்கு நன்றி எனவும், ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தான் இஸ்ரேல் – காசா போர் தலைகீழாக மாறியது எனவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.