நாங்கள் மோதலை விரும்பவில்லை – ஆப்கான் அமைச்சர் அமிர்கான்  

இந்தியாவுடனான வர்த்தகம் 1 பில்லியன் டாலர்களை தாண்டியது

Oct 13, 2025 - 18:33
 8
நாங்கள் மோதலை விரும்பவில்லை – ஆப்கான் அமைச்சர் அமிர்கான்   

நாங்கள் மோதலை விரும்பவில்லை – ஆப்கான் அமைச்சர் அமிர்கான்

 

நாங்கள் யாருடனும் மோதலை விரும்பவில்லை ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறது என ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் இந்தியாவுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்டு உள்ளேன்.

இந்த பயணம் இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவுடனான எங்கள் வர்த்தகம் 1 பில்லியன் டாலர்களை தாண்டியது.

காபூலில் தூதரகம் திறக்க இந்தியா முடிவு செய்து இருப்பது நல்லது. ஆப்கானிஸ்தானில் பணிபுரிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அமைதி அடையப்பட்டுள்ளது.

அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் யாருடனும் மோதலை விரும்பவில்லை.

பாகிஸ்தான் எங்கள் ஒரே அண்டை நாடு அல்ல. எங்களுக்கு இன்னும் ஐந்து அண்டை நாடுகள் உள்ளன. அவர்கள் அனைவரும் எங்களுடன் நல்ல உறவை கொண்டுள்ளனர்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே விமான வசதிகள் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விவாதித்தோம் என அமிர்கான் முட்டாகி கூறியுள்ளார்.