எஸ் பி வேலுமணி V/S கே.என்.நேரு காரசார விவாதம்!
அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

எஸ் பி வேலுமணி V/S கே.என்.நேரு காரசார விவாதம்!
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்ததாகவும் 15வது நிதிக்குழு சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே அரசுக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க முடியும். இதன் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டது. கடந்த 2018-ல் 50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக அரசு தான்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் வரியை உயர்த்தும்படி முதலமைச்சர் அறிவுறுத்தினார். சொத்து வரியை உயர்த்தினால் தான் 15வது நிதிக்குழு மூலம் நிதி தருவோம் என மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காகவே வரி உயர்த்தப்பட்டது என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
மிக முக்கியமாக மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிகவும் குறைவாக உள்ளது.
1000 சதுர அடிக்கு மும்பையில் 10,271 ரூபாயும், கொல்கத்தாவில் 5,850 ரூபாயும், பெங்களூரின் 5,783 ரூபாயும்,
டெல்லியில் 1,302 ரூபாயும் வசூலிக்கப்படும் சூழலில் சென்னையில் 570 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.