அதிரடியாக 1 லட்சத்தை தாண்டிய தங்கம்; அதிர்ச்சியில் தங்கம் முதலீட்டாளர்கள்!

அடுத்த ஆண்டும் தங்கத்தின் விலை உயரும்

Dec 15, 2025 - 17:25
 4
அதிரடியாக 1 லட்சத்தை தாண்டிய தங்கம்; அதிர்ச்சியில் தங்கம் முதலீட்டாளர்கள்!

அதிரடியாக 1 லட்சத்தை தாண்டிய தங்கம்; அதிர்ச்சியில் தங்கம் முதலீட்டாளர்கள்!

அதிரடியாக ஒரே நாளில் தங்கத்தின் விலை 1 லட்சத்தை தாண்டியது

1 சவரன் தங்கம் ரூ. 1,00,120க்கு விற்பனைக்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 12,515க்கும் விற்பனை

ஒரே நாளில் தங்கத்தின் விலை 1 லட்சம் என்பதையும் தாண்டி இருக்கிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது ரூ. 1,00,120க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 12, 515 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது புதிய உச்சத்தை தொட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.

பொருளாதார நிச்சயமற்ற சூழலின் காரணமாக இந்த ஆண்டு முதலே தங்கம் ஏற்றம் காண தொடங்கியது. அதன் காரணமாக தற்போது புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.

இதனையடுத்து, அமெரிக்க பிடரல் வங்கி சில தினங்களுக்கு முன்பு வட்டி விகிதத்தை குறைத்தது. பொதுவாக வட்டி விகிதம் குறைக்கப்படும் போது அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு குறைந்து தங்கத்தின் முதலீடு அதிகரிக்கும். அதன் காரணமாகவும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

மிக முக்கியமாக இந்த ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டும் தங்கத்தின் விலை உயரும் என சர்வதேச நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை தான் பிரதான முதலீடாக கருதுவார்கள்.

அதன் எதிரொலியாக தங்கம் விலை உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ள நிலையில் தங்கம் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது.

அதாவது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து 90. 75 ஆக உள்ளது.