3 நாள் தியானம் மேற்கொள்ளும் மோடி! பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது!

May 31, 2024 - 18:10
 7
3 நாள் தியானம் மேற்கொள்ளும் மோடி! பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது!
3 நாள் தியானம் மேற்கொள்ளும் மோடி! பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது!
3 நாள் தியானம் மேற்கொள்ளும் மோடி! பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது!

பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்வதற்காக 3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார்.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி சூரிய தரிசன வழிபாடு மேற்கொண்டார். இதற்காக, கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி வெள்ளை வேட்டி அணிந்து பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், சிறப்பு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்றடைந்தார். பிரதமரின் வருகையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பகவதியம்மன் திருவுருப்படம் வழங்கப்பட்டது.  ஜூன் 1ம் தேதி முதல் மாலை 3மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், தியானக் கூட்டத்தில் இருந்து வெளியே வருகிறார். பிறகு மாலை 3.30 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.