எதிர்கட்சிகளிடம் சிக்கிய ஸ்டாலின்! பெரும் குழப்பத்தில் உள்ள ஸ்டாலின்!

Jun 20, 2024 - 23:52
Sep 9, 2024 - 23:17
 8
எதிர்கட்சிகளிடம் சிக்கிய ஸ்டாலின்! பெரும் குழப்பத்தில் உள்ள ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள், மேகதாது அணை மற்றும் மாஞ்சோலை விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளனர். இதற்கான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கடிதத்தையும் கொடுத்துள்ளன.

தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று முன்னாள் உறுப்பினர்கள் மறைவு , குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கவன ஈர்ப்பு தீர்மானமானது நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதனால் ஆளும் திமுகவுக்கு சவாலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.