இதுதான் திராவிட மாடலா?

Jun 22, 2024 - 01:21
Sep 9, 2024 - 23:14
 11
இதுதான் திராவிட மாடலா?

கள்ளச்சாராயத்தின் சர்ச்சை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று நடந்த சம்பவமும் அப்படித்தான். ஒட்டுமொத்த தமிழகத்தையே பதபதைக்க வைத்துவிட்டது.

கள்ளச்சாராயம் என்றால் என்ன? அதிலும் மெத்தனால் எதற்கு பயன்படுத்தப்படுகிறது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மெத்தனால் என்பது பெரும்பாலும் ரசாயனமாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. போதையை கொடுக்கும் மதுவின் நச்சு வடிவமும் ஆகும். இவற்றை பயன்படுத்தி கிராமத்து மதுப்பிரியர்கள் கண்டு பிடித்தது தான் கள்ளச்சாராயம். அரிசி, பழைய பழங்களை கொண்டு உரல்களில் போட்டு அதில் போதைக்காக சிறிது மெத்தனாலை கலந்து விடுகிறார்கள். ஆனால் உடலில் அந்த ரசாயனம் கலந்து என்னவெல்லாம் எதிர்வினையாற்றுகின்றது என்பதையெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை.

இதற்கு முன்னரே கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் கடலூரில் தொழிற்சாலையில் இருந்து எடுத்த மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை நம்மால் மறந்து விட முடியாது.

இப்படி மெத்தனால் கலந்த சாராயத்தை 10 மில்லி குடித்தால் கண் பார்வை இழந்து விடும். 50 மில்லி குடித்தால் உயிரிழந்து விடுவர் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொழிற்சாலைகளிலும், ஆய்வகங்களிலும் பயன்படுத்தப்படும் இந்த மெத்தனாலின் காற்றை சுவாசிப்பதே ஆபத்து என்ற பட்சத்தில் இது கிராமங்களில் எப்படி உளாவ தொடங்கியது என்பது இன்றைய மிகப்பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது.

இது ஆளும் கட்சியின் கையாலாகாத தனம் என பலறும் விமர்சித்து வரும் நிலையில் இந்த நிலை தொடர்கதையாக கூடாதெனவும், உயிர்களை அலட்சியப்போக்கில் பாராமல் இதற்கு அனுமதி கோறும் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.