நேரில் ஆஜரான நயினார் நாகேந்திரன் | Nainar Nagendran
நேரில் ஆஜரான நயினார் நாகேந்திரன் | Nainar Nagendran
பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கெனவே பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த போது, சென்னை தாம்பரத்தில் கடந்த ஏப். 6-ஆம் தேதி நெல்லை சென்ற விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போதுஉரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவக ஊழியர் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணைக்கு பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலர் கேசவ விநாயகம் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி பதிலளித்துள்ளர்.இதனை தொடர்ந்து இன்று முதல்முறையாக நயினார் நாகேந்திரன் ஆஜராகியுள்ளார்.