ஆஸ்கர் நூலகத்தில் இடம்பிடித்த “பார்க்கிங்”

ஹரிஷ் கல்யான், எம்.எஸ் பாஸ்கர், இந்துஜா இவங்களாம் இணஞ்சு நடிச்சிருந்த படம் தான் பார்க்கிங். 2023 டிசம்பர் 1ம் தேதி ரிலீசான இந்த படம் இளைஞர்கள் மட்டுமில்லாம பெரியவங்க மத்தியிலயும் நல்ல வரவேற்ப பெற்றுச்சு. ஒரு சின்ன ஈகோவால வர பிரச்சனைய எடுத்து சொல்ற இந்த படம் பயங்கர த்ரில்லிங்கா இருந்துச்சுன்னு தான் சொல்லனும்.
இந்த நிலையில தான் இந்த படத்தோட திரைக்கதைய ஆஸ்கர் அகேடமியோட நூலகத்துல வைக்கிறதுக்காக அந்த நிறுவனம் படக்குழுக்கிட்ட கேட்டுருக்கதா தகவல் வெளியாகி இருக்கு. இந்த தகவல ஹரிஷ் கல்யாண் தன்னோட எக்ஸ் தளத்துல ஒரு பதிவயும் வெளியிட்டுருக்காரு. அதுல என்ன சொல்லிருக்காரு அப்டின்னா? ஒரு நல்ல கத அதுக்கான இடத்த தானே தேடி போகும் அப்டின்னு சொல்லி பெருமிதத்தோட பதிவிட்டுருக்காரு.