மக்களை கடனாளி ஆக்கியது தான் மிச்சம்! விடியா அரசின் சாதனை இதானா?

May 8, 2024 - 20:16
 17
மக்களை கடனாளி ஆக்கியது தான் மிச்சம்! விடியா அரசின் சாதனை இதானா?

விடியா திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 36 மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள்களின் கேந்திரமாக மாறிவிட்டது அதோடு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல்,போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் ஆளும் கட்சியின் சில நிர்வாகிகளே ஈடுபட்டது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது. எனவும், திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தில் சாதி மத வெறுப்புகள் அதிகரித்து காணப்படுவதாகவும், 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மக்களை கடனாளியாக ஆக்கியது தான் விடியா அரசின் சாதனையா என கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, ஆளுங்கட்சி நிர்வாகிகளால், போலீசார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர்.

என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.