அதிபர் ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு! இஸ்ரேல் பொறுப்பல்ல!

May 20, 2024 - 20:06
 4
அதிபர் ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு! இஸ்ரேல் பொறுப்பல்ல!

ஈரான் அதிபர் காணாமல் போன ஹெலிகாப்டர் கண்டரியப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் முழுவதும் எரிந்த நிலையில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அதிபர் இப்ராஹிம் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3வது அணையின் திறப்பு விழா ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இவ்ஹான் அலியெவுடன், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றார்.

இஸ்ரேலுடன் ஈரான் பகை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜர்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகர், டெஜ்ரானில் உள்ள தலைநகர், டெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிசூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான் – அஜர்பைஜான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபர் ரய்சி நாடு திரும்பினார். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்பட பலர் பயணித்தனர்.

அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில், ரய்சி பயணம் செய்த ஹெலிகாப்டர் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த சிரமத்துடன் தரையிறங்கியதாகவும், இதனையடுத்து, அந்த ஹெலிகாப்டர் உசி என்ற சிற்றூருக்கு அருகில் தரையிறங்கியதாக முதலில் அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடம் குறித்த விவரங்களில் முரண்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் தான் அதிபர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. அதிபருடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 8 பேரும் விபத்தில் பலியாகினர்.

இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.