அதிபர் இப்ராஹிம் யார்? அவருடைய முழு பின்னணி !

May 21, 2024 - 00:12
 6
அதிபர் இப்ராஹிம் யார்?  அவருடைய முழு பின்னணி !

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி விபத்தில் பலியானார். இதில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், அதிபர் இப்ராஹிம் யார்? இவருடைய ஆட்சி அங்கு எப்படி இருக்கிறது? அவருடைய முழு பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 கடந்த 2021 ஜூன் 18ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீதித்துறை முன்னாள் தலைவர் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்று ஈரானின் 13வது அதிபராக பொறுப்பேற்றார்.

Hojath al islam saiyad Ibrahim raisi என்ற பெயரை கொண்ட அவர், 1960ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வடகிழக்கு ஈரானின் மஷாத்தில் பிறந்தார்.  நவீன ஈரானின் பழைவாதிகளில் முக்கியமானவராக அறியப்படும் ரய்சி மஷாத் நகரில் உள்ள 8வது shiya imam raisa புனித ஆலயமும், அந்த நாட்டின் மிகவும் வளமான சமூக அமைப்பான asthak e kut sing புறவளராக இருந்துள்ளார்.

இவர் கருப்பு தலைபாகை அணிவதை வழக்காம கொண்டுள்ளார். இது

ஈரானின் உட்சபட்ச அதி உயர் தலைவர் பதவிக்கு தனக்கு அடுத்த ஒருவரை தெரிவு செய்வதற்கு 82 வயதாகும் ஆயத்துலா அலி காமநேயி முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் இப்ராஹிம் ரய்சிக்கு மட்டுமே அவருடைய தேர்வாக இருக்கும் எனவும் அப்போது பேசப்பட்டு வந்தது. அதே போல் காமநேயியின் மிகவும் முக்கிய நம்பிக்கைக்குரிய ஒருவராக இன்ராஹிம் கருதப்பட்டு வந்தார்.

ஈரானை பொறுத்தவரை இப்ராஹிம் இஸ்லாமிய நீதி அமைப்பை முன்னிருத்தி நாட்டையும் அரசாங்கத்தையும் சிறந்த முறையில் ஆட்சி செய்வார் என நம்பப்படுகிறது.  

ஈரானில் அதி உயர் தலைவரே நாட்டின் மிகப்பெரிய மத மற்றும் அரசியல் கொண்டவராக திகழ்கிறார். அவர் நாட்டின் தலபதியாகவும், செயல்படுகிறார்.

நீதித்துறையில் இப்ராஹிம் ரய்சி பல்வேறு பதவிகளுடன் பணியாற்றி உள்ளதுடன் நாட்டின் அதிஉயர் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நிபுனர் குழுவின் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும் இருந்துள்ளார்.

1988ம் ஆண்டு தெஹரான் இஸ்லாமிய புரட்சியின் நீதிமன்றத்தின் வழக்குறைஞராக ரய்சி பணியாற்றிய போது அவர் 4 உறுப்பினர்களை கொண்ட சிறப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அந்த ஆணையம் அதிகளவிலான இடதுசாரி தலைவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் அதிர்ப்தியாளர்களை தூக்கில உத்தரவிட்டது.

இதனால் ரய்சியில் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த 2017ல் நடந்த அதிபர் தேர்தலில் வெறும் 38.5 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். எனினும், 2019ல் அவரை நீதித்துறை தலைவராக அதிஉயர் தலைவர் காமநேயி நியமனம் செய்தார்.

அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் ரய்சி உட்பட 8 பேர் மீது அமெரிக்க அரசு தடை உத்தரவுகளை பிறப்பித்தது. இவர்கள் அனைவரும் ஈரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமநேயிக்கு மிக நெருக்கமானவர்கள் என்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் அமெரிக்க காரணம் கூறியிருந்தது.

இதனையடுத்து அதிபரான உடனே செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த  இப்ராஹிம் ரய்சி தான் ஒரு மனித உரிமைகளின் பாதுகாகவளர் எனவும் அமெரிக்க அதிபர் சந்திப்பு குறித்து கேட்ட போது அமெரிக்க அதிபர் ஜோ பைடை சந்திக்கும் அளவிற்கு அவர் முக்கியமானவர் இல்லை என பதிலளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் பலியானதை அடுத்து தற்போது புதிய அதிபராக முகமது முக்பர் பதவியேற்கிறார்.