காணாமல் போன எம்.பி சடலமாக மீட்பு! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!

May 22, 2024 - 21:49
 7
காணாமல் போன எம்.பி சடலமாக மீட்பு!   சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!

கடந்த மே 14 தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காணாமல் போன வங்கதேசத்தை சேர்ந்த எம்.பி அன்வருல் அசீம் தற்போது சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்க தேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.அன்வருல் அசீம் கடந்த 14ம் தேதி வங்க தேசத்திலிருந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார். பாராநகரில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர் மாயாமானார். இதனையடுத்து,  அவர் எங்கு போனார்? என்ன ஆனார் என்பது எதுவும் தெரியவில்லை. அவரது தொலைப்பேசியும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் வங்கதேசத்தில் எம்.பியின் குடும்பத்தினர் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்திருந்ததனர்.

அதன் அடிப்படையில் வங்க தேச அலுவலகம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில் தான் மேற்கு வங்கத்தில் உள்ள நியூட்டோன் என்னும் பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எம்.பியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வங்கதேச தலைநகர் தாக்காவில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்தும், இது தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.