துப்பாக்கியால் வேட்டையாடினால் ஆபத்தா? தத்ரூபமாக வேடமிட்ட மாணவிகள்!

Jul 27, 2024 - 18:57
 11
துப்பாக்கியால் வேட்டையாடினால் ஆபத்தா? தத்ரூபமாக வேடமிட்ட மாணவிகள்!

இன்று உலக புலிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அழிந்து வரும் புலிகள் இனத்தை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இன்று புதுக்கோட்டை வைரம் பப்ளிக் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன்,  மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் பள்ளியின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இதில்,  பத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் புலிவேடம் அணிந்து புலிகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் எனவும் துப்பாக்கியை பயன்படுத்தி புலிகளை வேட்டையாடக் கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியானது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி புதிய பேருந்து நிலையம் வரை நிறைவடைந்தது.